10th Layer
HomeLettersPodcastSubscribe ↗
← All letters

#1 Desperation

Desperation drives consistency.

A letter fromPraveen Simon

அன்புள்ள வாசகர்களுக்கு

Consistency.

இந்த ஒரு வார்த்தைதான் என் வாழ்கையை தலைகீழாக திருப்பி போட்டது.

"இது என்ன பெரிய சாமாசாரம். தொடர்ந்து ஒரு விஷயத்தை பண்ணனும். அதுதான consistency?"

இப்படி நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நானும் அப்படித்தான் நினைத்தேன். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

சில பல மாதங்களாகவே ஒரு விஷயத்தை செய்ய நான் பெரும்பாடு பட்டுகொண்டிருக்கேன்.

என் sleep cycle மூன்றாம் பிறை climaxசில் வரும் கமலஹாசன் போன்று கந்தர கோலமாக உள்ளது.

A Moondram Pirai scene labelled my reels algo and my sleep cycle.

இதை fix செய்ய வேண்டும். இதுதான் mission.

முதல் நாள் வெற்றிகரமாக 10 மணிக்கு phoneனை எட்டவைத்துவிட்டு படுத்துவிட்டேன்.

கண்ணை மூடினால் ஒரே இருட்டு. இது என்ன அதிசயம். கண்ணை மூடினால் இருட்டாகதானே இருக்கும்.

அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது, கண்ணை மூடினால் வரும் இருட்டை கண்டு பல மாதங்கள் ஆகிவிட்டது.

பொதுவாக reels பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்கள் சொருகும். சில நேரங்களில் முகத்தில் phoneனை தவறி போட்டுக்கொண்டு முகம் வீங்கிய கதையெல்லாம் உண்டு.

அப்படி தூங்கியவன் இன்று உறக்கத்தை primary taskஆக வைத்துக்கொண்டு முயலும்போதுதான் தெரிந்தது, கண்மூடியதற்கும் தூங்குவதற்கும் இடையே ஒரு இருட்டான பொழுது இருக்கிறது என்று.

அந்த இருட்டுக்கு முன் தோற்றுபோனேன்.

என்னால் அந்த boringஆன நிசப்தத்தை handle செய்யமுடியவில்லை. மறுபடி phoneனை எடுத்து reels பார்க ஆரம்பித்துவிட்டேன்.

சம்மந்தம் இல்லாத பாட்டுக்கு சம்மந்தம் இல்லாத dance moves போடும் சம்மந்தம் இல்லாத தோழர் தோழிகளை பார்த்தால்தான் உறக்கம் வருகிறது.

அடுத்தநாள் Atomic Habits என்ற புத்தகத்தில் சொல்லிருந்த ஒரு techniqueஐ try செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

ஒரு கடினமான பழக்கத்தை பழக்கபடுத்திகொள்ளவேண்டுமென்றல், அந்த பழகத்தை series of actionsஆக பிரிதுகொள்ளவேண்டும்.

உதாரணத்திற்கு sleep cycleலை fix செய்யவேண்டும் என்றால், என்ன series of actions இருக்கிறது?

Three nested circles showing the bedtime routine: bedroom, light off, then phone away and eyes closed.
  1. 9:30 மணிக்கெல்லாம் bed roomமுக்குள் சென்றுவிடவேண்டும்.
  2. 9:45 மணிக்குள் lightடை off செய்துவிடவேண்டும்.
  3. 10:00 மணிக்குள் phoneனை பக்கத்தில் வைத்துவிட்டு கண்ணை மூடிவிட வேண்டும்.

இதில் first actionனை ஒரு வாரத்திற்கு consistentடாக செய்யவேண்டும். வெற்றி என்றால் next action அடுத்த ஒரு வாரத்திற்கு. ஒரு நாள் தோல்வியுற்றாலும் next day, Day 1னாக start செய்யவேண்டும்.

Action 1: 9:30 மணிக்கெல்லாம் bed roomமுக்குள் சென்றுவிடவேண்டும். இது success. ரொம்ப easyயான taskகாக இருந்தது.

நான் மாட்டிக்கொண்டது action 2வில்.

ஒரு light switchசை off செய்வது அவ்வளவு கடினமாக உள்ளது. பல நாட்களுக்கு பிறகு, நாளை, day 1.

A film still captioned Day one.

இப்படி day 1, day 1 என்று நாட்கள் கழிகிறது.

ஒரு switchஇல் கூட consistencyயை maintain செய்யமுடியாத ஒருவனால் எப்படி ஒரு companyகு founderராக இருக்க முடியும்? எப்படி 170K followers உள்ள ஒரு personal brandடை உருவாக்க முடியும்?

சிந்திக்கும்பொழுது ஒரு விஷயம் புலப்பட்டது. Desperation drives consistency.

நான் என் Instagram profileலில் முதல் முறை video போட்டபொழுது நான் desperate ஆக இருந்தேன்.

I was desperate to prove them wrong.

Brand marketingகிலும் product management and product marketingகிலும் பல தவறான assumptionsகள் உள்ளன.

என் மேலிடத்தில் வேலை செய்பவர்கள் தவறான பாதையில் சென்றனர்.

ஒரு productடை இப்படி build செய்யக்கூடாது. ஒரு brandடை இப்படி build செய்யக்கூடாது. இப்படி செய்தால் குறுகிய காலத்திற்கு வெற்றி தருவது போல இருந்தாலும், தொலைநோக்குபார்வையில் தோல்வி நிச்சயம். இப்படி என்னுள் குமுறிக்கொண்டிருந்த அறிவுசுடரை வெளியே சொல்லி, இவர்கள் செய்வது தவறு என்று நிரூபிக்கவேண்டும் என்ற desperation.

இந்த desperationனில் ஆரமிக்கபட்டதுதான் என் personal brand.

So consistencyகு ஒரு desperation தேவை.

A diagram showing desperation as the input driver leading to consistency as the sustained outcome.

Consistentடாக gymமுக்கு செல்ல வேண்டுமா? How desperate are you to lose weight என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

Consistentடாக பணம் சம்பாரிக்கவேண்டுமா? How desperate are you for money என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

Consistencyயை ஒரு discipline actடாக கருதி try செய்யலாம். Try செய்து வெற்றி கண்டவர்களும் உள்ளனர். இதைதான் Atomic habits என்ற புத்தகமும் சொல்கிறது.

ஆனால் என்னை பொறுத்தவரை desperation தரும் உந்துசக்தியை வேறு எதுவும் தராது. Dot.

இப்படிக்கு Praveen Simon

P.S. இந்த கடிதத்திற்கு ஆதரவாகவோ இல்லை எதிர்மறை கருத்துகளோ இருந்தால், feel free to share with me at praveensimon@10thlayer.com.

இந்த கடிதங்களை தொடர்ந்து வாசிக்கவிரும்பினால் உங்கள் email IDயை கொடுத்து subscribe செய்து கொள்ளவும்.

Get my next letter

10th Layer

Positioning and implementation for Indian ecommerce brands.

Resources

ResourcesPodcastLetters from PS

Tools

Audit my pageTalk to Praveen
© 2026 10th Layer